இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6.7 ஆக பதிவு


இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6.7 ஆக பதிவு
x

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து உடனடியாக தகவல் எதுவும் இல்லை.

இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் தனிபார் தீவுகளில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து வீதியில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுகத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

கடந்த 2023 ஆம் ஆண்டு இதே தனிபார் தீவுகளில் ரிக்டர் அளவில் 7.6 என்ற அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது சுனாமி எச்சரிக்கை பல மணி நேரத்திற்கு விடப்பட்டு இருந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். இந்தோனேஷியாவின் மலுகு மாகாணத்தில் இந்த தனிபார் தீவுகள் உள்ளன. மொத்தம் 30 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய பகுதியான தனிபாரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும்.

1 More update

Next Story