பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.7 ஆக பதிவு

பப்புவா நியூ கினியாவில் ரிக்டரில் 7.7 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
பப்புவா நியூ கினியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டரில் 7.7 ஆக பதிவு
Published on

லே,

பப்புவா நியூ கினியாவில் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக அறியப்படும் லே நகரம் உள்ளது. இந்நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

எனினும், இந்நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com