தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; கட்டிடங்கள், கடைகள் குலுங்கின

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில் வீடுகள், கட்டிடங்கள், கடைகள் குலுங்கின.
தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; கட்டிடங்கள், கடைகள் குலுங்கின
Published on

தைப்பே,

தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் 11.9 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

இதனால், வீடுகள், கட்டிடங்கள், கடைகள் குலுங்கின. எனினும், நிலநடுக்கம் தொடர்ச்சியாக ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை. வணிக வளாகத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் குலுங்கி, தரையில் விழுந்து கிடந்தன.

2016-ம் ஆண்டு, தைவானின் தெற்கே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 1999-ம் ஆண்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com