ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் 5.2 ரிக்டர் அளவுள்ள சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Published on

டோக்கியோ,

ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோன்சு தீவில் உள்ள ஹசனாஹி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 3.15 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 36 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். எனினும் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com