

டோக்கியோ,
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 22 பேர் படுகாயமடைந்தனர்.
ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு ஜப்பான். பசுபிக் பெருங்கடலின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள இந்நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.
இந்நிலையில், ஜப்பானின் ஷிஷோகா மாகாணத்தில் இன்று நள்ளிரவு 1.04 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால், இரவில் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 22 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.