பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு.
பெரு நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on

லிமா,

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு பெரு. இந்நாட்டில் நள்ளிரவு 1 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம்

அந்நாட்டின் பரினகொச்சோஸ் மாகாணம் உபஹசொ நகரில் இருந்து 38 கிலோமீட்டர் தூரத்தில் 66 கிலோ மீட்டர் ஆழத்தில் அண்டெஸ் மலைத்தொடர் பகுதியில் இன்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின.

அந்நாட்டின் ஐகா, ஆர்கியுபா ஆகிய நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டனவா? என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. பெருவில் கடந்த 2007ம் ஆண்டு ரிக்டர் அளவில் 7.9 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com