

வாஷிங்டன்,
பூமியை நேற்று ஒரு சக்திவாய்ந்த சூரியப் புயல் தாக்கியது. சூரியனில் உள்ள 'சன்ஸ்பாட் 4549' என்ற பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய வெடிப்பு காரணமாக, நேற்று பூமியின் காந்தப்புலத்தை ஒரு சக்திவாய்ந்த சூரியப் புயல் தாக்கியுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சி அமைப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்த கடுமையான சூரியப் புயல் காரணமாக, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதி களில் வானத்தில் மிக அழகான 'ஆரோரா' எனப்படும் விசித்திரமான துருவ ஒளி கள் தோன்றின. சூரியப் புயலின் தாக்கத்தால் நேற்று சில பகுதிகளில் ரேடியோ சிக்னல்கள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன.
மேலும், செயற்கைக்கோள் தொடர்புகள் மற்றும் மின்சார வினியோகக் கட்டமைப்பு களில் லேசான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. விண்வெளியில் சுழலும் செயற்கைக் கோள் கூட்டமைப்புக்கு லேசான தொழில்நுட்ப நெருக்கடிகளையும் தற்காலிகத் தடைகளையும் இது கொடுத்தது. விண்வெளியில் இருந்து விநாடிக்கு 900 கி.மீ. வேகத்தில் வந்த சூரியப் புயல் பூமியை மோதின. பூமிக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.