பாகிஸ்தான் மக்கள் கட்சி இன்று கருப்பு தினம் கடைப்பிடிக்கிறது; பேரணிகள், போராட்டங்கள் நடத்த முடிவு

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டோ ஆட்சியை கவிழ்த்ததற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் மக்கள் கட்சி இன்று கருப்பு தினம் கடைப்பிடிக்கிறது.
பாகிஸ்தான் மக்கள் கட்சி இன்று கருப்பு தினம் கடைப்பிடிக்கிறது; பேரணிகள், போராட்டங்கள் நடத்த முடிவு
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கடந்த 1977ம் ஆண்டு பிரதமராக இருந்த ஜுல்பிகர் அலி பூட்டோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவ தளபதியாக இருந்த ஜியாவுல் ஹக் கலைத்து விட்டு ராணுவ ஆட்சியை புகுத்தினார்.

அதன்பின்னர் அடுத்த 11 வருடங்கள் நாட்டை அவர் ஆட்சி செய்துள்ளார். நாட்டில் ஜனநாயகத்தினை வெளியேற்றி விட்டு, சர்வாதிகாரத்தினை நடைமுறைப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினத்தினை பாகிஸ்தான் மக்கள் கட்சி கருப்பு தினம் ஆக கடைப்பிடிக்கிறது.

இதனை அடுத்து நாடு முழுவதும் உள்ள அக்கட்சியின் அலுவலகங்களில் இன்று கருப்பு கொடிகள் பறக்க விடப்படும். நாட்டின் மாகாணங்களில் உள்ள மாவட்ட தலைமையகங்களில் பேரணிகள் மற்றும் போராட்டங்கள் நடைபெறும் என கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com