‘டெல்லியில் இருக்கும் என் கணவருடன் சேர்த்து வைக்கவும்!’ - பிரதமர் மோடியிடம் உக்ரேனிய பெண் கோரிக்கை

இந்தியரை மணமுடித்த உக்ரேனிய பெண் தன்னை இந்தியாவுக்கு அழைத்து வந்து தன் கணவருடன் சேர்த்து வைக்குமாறு பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
image courtesy; Internet
image courtesy; Internet
Published on

போலாந்து,

உக்ரைனை சேர்ந்த பெண் ஒருவர், இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், அவருடைய கணவர் டெல்லியில் உள்ளார். ஆனால் அவரோ, தன் மனைவியை ரஷிய போரால் உருக்குலைந்து போயிருக்கும் உக்ரைனில் விட்டுச் சென்றுள்ளார்.

இதற்கிடையே, தற்போது கர்ப்பமாக இருக்கும் அந்த பெண்மணி, உக்ரைனின் அண்டை நாடான போலாந்து வார்சா நகரிலுள்ள அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளார்.

அங்கிருந்த கொண்டு அவர் இந்திய பிரதமர் மோடியிடம் தன்னையும் இந்தியாவுக்கு மீட்டுக்கொண்டு வந்து தன் கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அகதிகள் முகாமில் இருக்கும் செய்தியாளர்கள் மூலம் இந்த விஷயம் தற்போது வெளிவந்திருக்கிறது.

உக்ரைனில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை பத்திரமாக மீட்டுக்கொண்டு வந்து கொண்டிருக்கும் இந்திய அரசு, அங்கு தவித்து கொண்டிருக்கும் இந்தியாவின் மருமகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com