

கினியா,
இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருக்கு கினியா நாட்டு அரசாங்கம் நேஷனல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் விருதையளித்து கவுரவித்துள்ளது.
இது அந்நாட்டு அரசாங்கத்தால் வழங்கப்படும் உயரிய விருதாகும். இரு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் முக்கிய பங்காற்றிய அவரை கவுரவிக்கும் விதமாக இவ்விருதினை அந்நாட்டு அரசாங்கம் வழங்கியுள்ளது.
இந்த விருதை இந்திய மக்களுக்கும், கினியா மக்களுக்கும் சமர்ப்பணம் செய்வதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பரஸ்பர உறவு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேலும் மூன்று ஒப்பந்தங்கள் கையழுத்தாகின.
தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த ராம்நாத் கோவிந்த் இன்று அதிகாலை இந்தியா வந்து சேர்ந்தார்.