ஜனாதிபதி திரவுபதி முர்மு மால்டோவா பயணம்

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்
ஜனாதிபதி திரவுபதி முர்மு மால்டோவா பயணம்
Published on

கிசினோவ்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் மால்டோவா, வடக்கு மக்கெதோனியா, ருமேனியா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மால்டோவா பயணம்

இந்நிலையில், ஐரோப்பிய பயணத்தின் முதல் நாடாக ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று மால்டோவா சென்றுள்ளார். இதன் மூலம் மால்டோவா சென்ற முதல் இந்திய ஜனாதிபதி என்ற பெருமையை திரவுபதி முர்மு பெற்றுள்ளார்.

தலைநகர் கிசினோவ் சென்ற திரவுபதி முர்முவை அந்நாட்டு துணை பிரதமரும், வெளியுறவுத்துறை மந்திரியுமான மைஹை பாப்சொய் விமான நிலையத்திற்கே நேரில் சென்று வரவேற்றார்.

இந்த பயணத்தின்போது மால்டோவா ஜனாதிபதி மயா சந்துவை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மால்டோவா பயணத்தை திரவுபதி முர்மு நாளை வடக்கு மக்கெதோனியா செல்ல உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com