ருமேனியா வாழ் இந்தியர்களை சந்தித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.
ருமேனியா வாழ் இந்தியர்களை சந்தித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு
Published on

புட்ச்ரெஸ்ட்,

ஜனாதிபதி திரவுபதி முர்மு அரசு முறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். மால்டோவா, வடக்கு மாசிடோனியா சென்ற ஜனாதிபதி முர்மு கடந்த 23ம் தேதி ருமேனியா சென்றார். அவர் ருமேனிய ஜனாதிபதி நிகோசர் டென்னை சந்தித்தார். இதையடுத்து நேற்று நடந்த நிகழ்ச்சியில் ருமேனிய தொழிலதிபர்களை ஜனாதிபதி முர்மு சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு ருமேனிய நிறுவனங்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், ருமேனிய பயணத்தின் இறுதி நாளான இன்று ருமேனியா வாழ் இந்தியர்களை ஜனாதிபதி திரவுபதி முர்மு சந்தித்தார்.

ஜனாதிபதி முர்மு மகிழ்ச்சி

ருமேனியா வாழ் இந்தியர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு பேசியதாவது,

ருமேனியா வாழ் இந்தியர்கள் ஒன்றுபட்டு இந்தியாவின் வளமையான கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் உயிர்ப்புடன் வைத்திருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

இந்திய நிறுவனங்களும், இந்திய தொழில் நிபுணர்களும் ருமேனியாவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதையும், இந்தியா, ருமேனியா இடையே புதிய வாய்ப்புகளை உருவாக்குவதையும் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com