

கொழும்பு,
மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இலங்கையிலும் நேற்று கொண்டாடப்பட்டது. இலங்கை அதிபர் சிறிசேனா கொழும்பு நகரில் உள்ள தலைமைச்செயலகத்தில் காந்தியின் பிறந்தநாளையொட்டி சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். விழாவில் அவர் காந்தியின் மார்பளவு வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சாந்தும் கலந்து கொண்டார். காந்தி பிறந்தநாளையொட்டி அவரது உருவபடம் பொறித்த தபால் தலையை இலங்கை நேற்று வெளியிட்டது. இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே தனது அதிகாரப்பூர்வ அலுவலக குடியிருப்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.