ஜனாதிபதிகள் தினம்.. அமெரிக்காவில் இன்று பொது விடுமுறை

அமெரிக்காவில் மத்திய அரசு அலுவலகங்கள் இன்று செயல்படாது என்பதால் பல்வேறு பணிகள் பாதிக்கும்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் இன்று ஜனாதிபதிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதிகள் தினத்தை முன்னிட்டு இன்று அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அமெரிக்க தபால் சேவை, வங்கிகள், பள்ளிகள் மற்றும் பங்குச் சந்தைகள் மூடப்படுகின்றன. அமெரிக்கா முழுவதும் இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பெரும்பாலான ஓட்டல்கள், மளிகைக் கடைகள் மற்றும் சில்லறை விற்பனை நிறுவனங்கள் திறந்திருக்கும். மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படாது என்பதால் பல்வேறு பணிகள் பாதிக்கும்.
2025-ம் ஆண்டிற்கான மத்திய பொது விடுமுறை நாட்கள் வருமாறு:
ஜனவரி 1 - புத்தாண்டு தினம்
ஜனவரி 20 - மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் தினம்
பிப்ரவரி 17 - ஜனாதிபதிகள் தினம்
மே 26 - போர் வீரர்கள் நினைவு தினம்
ஜூன் 19 - ஜூன்டீன்
ஜூலை 4 - சுதந்திர தினம்
செப்டம்பர் 1 - தொழிலாளர் தினம்
அக்டோபர் 13 - கொலம்பஸ் தினம்
நவம்பர் 11 - முன்னாள் படை வீரர்கள் வீரர் தினம்
நவம்பர் 27 - நன்றி செலுத்தும் நாள்
டிசம்பர் 25 - கிறிஸ்துமஸ்.






