டிரம்ப் உள்ளிட்ட குவாட் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளில் கழிவில் இருந்து முக்கிய தாதுக்களை பிரித்தெடுப்பதற்கு தேவையான, உள்கட்டமைப்புகளை அமைப்பதற்காக 1 கோடி அமெரிக்க டாலரை (ரூ.93.5 கோடி) அளிக்க அமெரிக்கா அப்போது முன்வந்தது.
டிரம்ப் உள்ளிட்ட குவாட் தலைவர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு
Published on: 

மணிலா

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உள்ளிட்ட குவாட் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் 23-வது ஆசியான்-இந்தியா மாநாடு இன்று நடந்தது. இதற்காக, பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் ரொமுவால்டெஜ் மார்கோஸ் ஜூனியரின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் சென்றார்.

இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி குவாட் அமைப்பின் தலைவர்களை இன்று சந்தித்து பேசினார். இதில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ஆகியோர் ஒன்றாக குழு புகைப்படமும் எடுத்து கொண்டனர்.

டிரம்ப் புகழாரம்

அப்போது, மோடி எனது சிறந்த நண்பர். உலகம் முழுவதும் மதிக்கப்படும் தலைவர் என பிரதமர் மோடிக்கு டிரம்ப் புகழாரம் சூட்டினார். கடந்த அக்டோபர் 31-ந்தேதி அட்லாண்டாவில் நடந்த குவாட் வெளியுறவு துறை மந்திரிகளின் கூட்டத்தில் , 4 நாடுகளும் வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள், முக்கிய தாதுக்கள், கடல்சார் பாதுகாப்பு மற்றும் முதலீடு போன்றவற்றில் இன்னும் ஒத்துழைப்புடன் செயல்படுவது என அறிவித்தன.

அப்போது, இந்தோ-பசிபிக் பகுதியில் நம்பத்தகுந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் கிடைக்க பெறுவதற்கான வழிமுறைகளுக்காக, அதனை மேம்படுத்த ஏதுவான தொழில் நுட்பம் மற்றும் நிதி சார்ந்த உதவியாக 8.5 கோடி அமெரிக்க டாலரை (ரூ.794.71 கோடி) கூடுதலாக ஒதுக்கவும் மந்திரிகள் விருப்பம் தெரிவித்தனர்.

அமெரிக்கா உதவி

இந்தியா மற்றும் ஆசியான் நாடுகளில் கழிவில் இருந்து முக்கிய தாதுக்களை பிரித்தெடுப்பதற்கு தேவையான, உள்கட்டமைப்புகளை அமைப்பதற்காக 1 கோடி அமெரிக்க டாலரை (ரூ.93.5 கோடி) அளிக்க அமெரிக்கா அப்போது முன்வந்தது. இதற்கு அவர்கள் வரவேற்பும் தெரிவித்தனர்.

X