ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அமீரகம் சென்ற பிரதமர் மோடி அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து பேச உள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
Published on

அபுதாபி,

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இன்று காலை புறப்பட்டார். அவர் 6 நாட்கள் பயணமாக 5 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகம், நார்வே, சுவீடன், நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார்.

இந்தநிலையில், தனது பயணத்தின் முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபிக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு சார்பில் உற்சாக ராணுவ வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்தித்து, இருதரப்பு விவகாரங்கள் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்வதுடன், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதிக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தின் முக்கிய நோக்கம், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்துவதாக இருக்கும் என நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

X

Daily Thanthi
www.dailythanthi.com