பிரதமர் மோடி துபாய்க்கு அரசுமுறைப் பயணம் - புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்த இந்திய தேசிய கொடி

புர்ஜ் கலீபா கோபுரத்தில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்கள் ஒளிரவைக்கப்பட்டன.
பிரதமர் மோடி துபாய்க்கு அரசுமுறைப் பயணம் - புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்த இந்திய தேசிய கொடி
Published on

அபுதாபி,

பிரான்ஸ் நாட்டில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து கொண்டு இன்று ஐக்கிய அரபு அமீரகம் சென்று உள்ளார். பிரதமர் மோடி அபுதாபி நகரை சென்றடைந்ததும், அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அபுதாபி நகரில் துபாய் இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். முன்னதாக பிரதமர் மோடியின் வருகையையொட்டி துபாயில் உள்ள உலகப் புகழ் பெற்ற புர்ஜ் கலீபா கோபுரத்தில் இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்கள் ஒளிரவைக்கப்பட்டன. மேலும் அதில் பிரதமர் மோடியின் உருவப்படமும், 'பிரதமர் மோடியை வரவேற்கிறோம்' என்ற வாசகமும் இடம்பெற்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com