இங்கிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு


இங்கிலாந்து சென்றடைந்தார் பிரதமர் மோடி: உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 24 July 2025 1:19 AM IST (Updated: 24 July 2025 5:42 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்

லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து இடையே நீண்ட காலமாக சிறந்த உறவுகள் நீடித்து வருகின்றன. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இங்கிலாந்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.இதற்காக நேற்று அவர் டெல்லியில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்றார். லண்டன் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிரதமர் மோடி இந்த பயணத்தின்போது அவர் இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.மேலும் இங்கிலாந்து மன்னர் 3-ம் சார்லசையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும் எனத்தெரிகிறது.

இங்கிலாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி மாலத்தீவு செல்கிறார். அந்த நாட்டு அதிபர் முகமது முய்சு அழைப்பின்பேரில் 25 மற்றும 26-ந்தேதிகளில் அங்கே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர், அந்த நாட்டின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டங்களிலும் பங்கேற்கிறார்.

1 More update

Related Tags :
Next Story