மொரீஷியஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி

2 நாட்கள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி மொரீஷியஸ் சென்றார்.
மொரீஷியஸ் சென்றடைந்தார் பிரதமர் மோடி
Published on

மொரீஷியஸ்,

மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டின் 57-வது தேசிய தின கொண்டாட்டதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக இன்று காலை மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் மாலை அணிவித்து வரவேற்றார்.

இந்தியாவின் மானிய உதவியுடன் கட்டப்பட்ட சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் சமூக சுகாதார மையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைக்கிறார். மேலும் 20 உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே பரிமாறிக்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

பிரிட்டிஷிடம் இருந்து மோரீஷஸ் கடந்த 1968, மார்ச் 12-ம் தேதி சுதந்திரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் மோரீஷஸ் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு மோரீஷஸ் தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com