இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணத்திற்கு குதிரை படைவீரர் போல் கம்பீரமாக உடை அணிந்து வருகை

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணத்திற்காக இளவரசர் ஹாரி குதிரைப்படை சீருடை அணிந்து கம்பீரமாக தேவாலயத்திற்கு வந்தடைந்தார். #RoyalWedding2018
இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணத்திற்கு குதிரை படைவீரர் போல் கம்பீரமாக உடை அணிந்து வருகை
Published on

லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மேகன் மெர்கல் திருமணம், பிரிட்டனின் விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் இன்று மாலை

நடைபெறவுள்ளது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருந்தினர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

இங்கிலாந்து இளவரசர் ஹரியின் திருமணத்திற்காக அமெரிக்காவே இங்கிலாந்துக்கு திரண்டு வந்துள்ளது. மேலும், பல்வேறு பிரபலங்களும் அரச குடும்ப

உறுப்பினாகளும் வந்த வண்ணமாக உள்ளனா.

தற்போது மணப்பெண் மேகன் மார்க்கெல் தேவாலயத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். பின்னா இளவரசர் ஹாரி குதிரைப்படை சீருடை அணிந்து கம்பீரமாக தேவாலயத்திற்கு வந்தடைந்தார். அவருடன் இளவரசா பிரின்ஸ் வில்லியம் மற்றும் இங்கிலாந்து நாட்டுத் திரைப்பட நடிகர் ஜேம்ஸ் கோர்டன் தன்னுடைய மனைவியுடன் திருமணத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் ராஜ குடும்பத்தின் இளவரசர்களான ஆண்ட்ரூ மற்றும் எட்வர்டு ஆகியோரும் தேவாலயத்திற்கு வருகை தந்தனா.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com