2 பத்திரிகைகள் மீது இங்கிலாந்து இளவரசர் ஹாரி வழக்கு

2 பத்திரிகைகள் மீது இங்கிலாந்து இளவரசர் ஹாரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
2 பத்திரிகைகள் மீது இங்கிலாந்து இளவரசர் ஹாரி வழக்கு
Published on

லண்டன்,

இங்கிலாந்து இளவரசி மேகன் தனது தந்தைக்கு எழுதிய தனிப்பட்ட கடிதத்தை அனுமதியில்லாமல் வெளியிட்டது தொடர்பாக மெயில் ஆன் சண்டே என்ற பத்திரிகையின் மீது அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து பேசிய இளவரசர் ஹாரி, தனது தாயார் டயானாவை போல் மனைவி மேகன் ஊடகங்களால் குறிவைக்கப்படுவதாக வருத்தம் தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக கூறி தி சன் மற்றும் டெய்லி மிரர் ஆகிய 2 பத்திரிகைகள் மீது இளவரசர் ஹாரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

எனினும் இதற்கான ஆதாரங்களையோ, என்ன மாதிரியான உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டது என்பது குறித்த கூடுதல் தகவல்களையோ பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவிக்க மறுத்துவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com