குடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர்- இளவரசர் ஹாரி குற்றச்சாட்டு

அரச குடும்பத்தினர் என்னை பொருளாதார ரீதியில் கைவிட்டனர் என இளவரசர் ஹாரி குற்றஞ்சாட்டி உள்ளார்.
Image courtesy : news.sky.com
Image courtesy : news.sky.com
Published on

வாஷிங்டன்

இங்கிலாந்து அரச குடும்ப பொறுப்புகளிலிலிருந்து விலகிய இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்கெல் தங்களது மகனுடன் தற்போது அமெரிக்காவில் குடியேறி விட்டனர். அவர்கள் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆர்ப் வின்பிரேவுக்கு பேட்டி அளித்தனர்.

அந்தப் பேட்டியில் இளவரசர் ஹாரி கூறியதாவது:-

தான் ராஜ குடும்ப பொறுப்புகளிலிருந்து வெளியேறியதால், தனக்கு நிதியுதவி வழங்குவதை தனது குடும்பத்தினர் முற்றிலும் நிறுத்திவிட்டதாகவும், ஒரு ராஜ குடும்ப உறுப்பினர் என்ற முறையில் தனக்கு எப்போதுமே ஆபத்து உள்ளது என்பதால், பாதுகாப்பு பிரச்சினைகள் காரணமாகவே வேறு வழியில்லாமல், கனடாவிலிருந்து தனது குடும்பம், சொல்லப்போனால், தப்பியோடியதாகவும் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார் .

தனது குடும்பத்தாரிடமிருந்து உதவி முற்றிலும் நிறுத்தப்பட்ட அந்த நேரத்தில், தனது தாய் டயானா தனக்கு விட்டுச் சென்றிருந்த பணம்தான் தனக்கு உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார் ஹரி.

அத்துடன், அப்போது, இதுபோல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திட்டம் எதுவும் தங்கள் வசம் இல்லை என்றும், நண்பர் ஒருவர் நீங்கள் ஏன் அதைச் செய்யக்கூடாது என கேட்டதாகவும், அதன் பின்னரே பணத்துக்காக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முடிவை எடுத்ததாகவும் ஹாரி தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுக்கு தாங்கள் குடிபெயர்ந்ததும், ஹாலிவுட்டைச் சேர்ந்த டெய்லர் பெர்ரி என்பவர் தங்களுக்கு ஒரு வீட்டையும் வாடகைக்குக் கொடுத்து, தங்கள் பாதுகாப்புச் செலவையும் பொறுப்பெடுத்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

எனது ஒரே வருத்தம் எல்லாம் வரலாறு மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதுதான் என்று கூறிய ஹாரி, சமூக ஊடக பரிணாமங்களும் போட்டியும், எனது தாய்க்கு நேர்ந்த நிலையை விட இது மிகவும் அபாயகரமானது என்பதை உணர்த்துகிறது என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com