இங்கிலாந்து மகாராணியின் கணவரும், மன்னருமான பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

இங்கிலாந்து மகாராணியின் கணவரும், மன்னருமான பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து மகாராணியின் கணவரும், மன்னருமான பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி
Published on

லண்டன்

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், மன்னருமான பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்

99 வயதான இளவரசர் பிலிப், கடந்த மாதம் 17ம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள கிங் ஏழாம் எட்வர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்.

இந்நிலையில் இதயப் பிரச்சினை காரணமாக பிலிப் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வார இறுதி வரை அவர் மருத்துவமனையில் இருப்பார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com