நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் மரணம்

தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் அவர் கண்ணீருடன் கடைசிமுறையாக பொதுவெளியில் பங்கேற்றிருந்தார்.
நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் மரணம்
Published on

ஓஸ்லோ,

நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் (94) நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார்.

ஐரோப்பிய நாடான நார்வேயில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மன்னர் ஹரால்ட், கடந்த மாதம் தனது 89-வது வயதில் உயிரிழந்தார். இந்தத் துயரத்திலிருந்து நார்வே மக்கள் இன்னும் மீளாத நிலையில், மறைந்த மன்னர் ஹரால்டின் மூத்த சகோதரியான இளவரசி ஆஸ்ட்ரிட் (94) நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்தார். கடந்த புதன்கிழமைதான் தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் அவர் கண்ணீருடன் கடைசிமுறையாகப் பொதுவெளியில் பங்கேற்றிருந்தார்.

தம்பி இறந்த சில நாட்களிலேயே அக்காவும் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நார்வே நாட்டையும் உலுக்கியுள்ளது. இளவரசி ஆஸ்ட்ரிட்டின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள புதிய மன்னர் ஹாகோன், தனது வாழ்நாள் முழுவதும் அரச குடும்பத்திற்கு அவர் பெருமை சேர்த்தார் என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com