இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன், முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை நேற்று செலுத்திக் கொண்டார்
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்
Published on

லண்டன்,

இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு தற்போது வரை 3.8 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டு விட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி 39 வயதான இளவரசி கேட் மிடில்டன், நேற்று லண்டன் அறிவியல் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில் வைத்து முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

இந்த தகவலை அவர் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தடுப்பூசி செலுத்தும் பணியில் பங்கு வகிக்கும் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதே போல் 38 வயதான இளவரசர் வில்லியம், கடந்த வாரம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். மேலும் இங்கிலாந்து ராணி எலிசபேத், கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com