இங்கிலாந்து மன்னர் சார்லசை தொடர்ந்து இளவரசிக்கும் புற்றுநோய் பாதிப்பு

இளவரசி கேத் மிடில்டனின் உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரே வீடியோ வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்து மன்னர் சார்லசை தொடர்ந்து இளவரசிக்கும் புற்றுநோய் பாதிப்பு
Published on

லண்டன்,

இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் (வயது 42). கடந்த 2011-ம் ஆண்டு இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இளவரசியான கேத் மிடில்டனுக்கு கடந்த ஜனவரி மாதம் வயிற்று பகுதியில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதன்பிறகு இவர் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்தார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தற்போது அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை ஒரு வீடியோவாக வெளியிட்டு அவரே உறுதி செய்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இளவரசி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், `கடந்த சில மாதங்களுக்கு முன்பு வயிற்றுப்பகுதியில் செய்யப்பட்ட ஆபரேசன் வெற்றிகரமாக முடிந்தது. ஆனால் அதன் பிறகு மேற்கொண்ட சோதனையில்தான் புற்றுநோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

எனினும் குடும்பத்தின் நலன் கருதி அதனை வெளிப்படையாக சொல்லவில்லை. தற்போது குழந்தைகளுக்கு அதன் பாதிப்பை சொல்லி புரிய வைத்துள்ளோம். மேலும் புற்றுநோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்காக கீமோதெரபி சிகிச்சையும் பெற்று வருகிறேன்' என தெரிவித்தார்.

இதனையடுத்து இவர் விரைவில் குணமடைய வேண்டி அரச குடும்பத்தை விட்டு விலகிய ஹாரி-மேகன் தம்பதி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இங்கிலாந்து மன்னரும், கேத் மிடில்டனின் மாமனாருமான சார்லஸ் ஏற்கனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com