பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம்

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று மெலோனி அரசு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வலியுறுத்தி இத்தாலியில் போராட்டம்
Published on

ரோம்,

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. இருப்பினும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதற்கு முன்பு ஆதரவு தெரிவித்து வந்த அவர் திடீரென்று தனது முடிவை மாற்றினார். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க மாட்டோம் என்று மெலோனி அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது. இதற்கு எதிராக இத்தாலி முழுவதும் ஆர்ப்பாட்டம், பேரணிகள் நடந்தது.

பல்வேறு பாலஸ்தீன ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மிலன் நகரில் நடந்த போராட்டத்தின்போது போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள், பாட்டில்களை வீசினர். மேலும் அங்குள்ள ரெயில் நிலையத்தை சூறையாடினர். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

மேலும் பல இடங்களில் போலீசார்-போராட்டக்காரர்கள் இடையே இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் 60-க்கும் மேற்பட்ட போலீசார் காயம் அடைந்தனர். மிலனில் போராட்டக்காரர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் துறைமுகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடந்தது. இத்தாலியில் போராட்டங்களின் எதிரொலியால் அங்கு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com