சம்பள உயர்வை எதிர்த்து போராட்டம்:இந்தோனேசியாவில் நிதி மந்திரி உள்பட 5 பேர் நீக்கம்

தனிநபர் வருமானம் சுமார் ரூ.17 ஆயிரமாக உள்ள நிலையில் எம்.பி.க்களின் சம்பளம் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது.
ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதற்கிடையே அங்குள்ள எம்.பி.க்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு வாடகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. குறிப்பாக தனிநபர் வருமானம் சுமார் ரூ.17 ஆயிரமாக உள்ள நிலையில் எம்.பி.க்களின் சம்பளம் ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் 7 பேர் பலியாகினர். இதனால் எம்.பி.க்களின் சம்பளம், சலுகைகள் குறைக்கப்பட்டன. மேலும் அரசாங்கம் மீது மக்கள் அதிருப்தியுற்றதால் மந்திரி சபையிலும் அதிரடி மாற்றத்தை அதிபர் பிரபாவோ சுபியாண்டோ அறிவித்தார். அதன்படி நிதி மந்திரி ஸ்ரீ முல்யானி இந்திராவதி, ராணுவ மந்திரி புடி குணவன் உள்பட 5 மந்திரிகள் நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
Related Tags :
Next Story






