இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு - யாழ்ப்பாணத்திலும் போராட்டம்

இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கை யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடைபெற்றது.
இந்திய விவசாயிகளுக்கு ஆதரவு - யாழ்ப்பாணத்திலும் போராட்டம்
Published on

கொழும்பு,

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக இலங்கையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. தேசிய ஒத்துழைப்பு மீனவர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக கூடியவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, விவசாயிகளின் நியாயமான கோரிக்கைக்கு இந்திய அரசு செவி சாய்க்க வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல் நிவரலியா மாவட்டத்தில் உள்ள அட்டன் நகரத்தில் சிவில் அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்தது. அதில் விவசாயிகளின் கோரிக்கையை இந்திய அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com