விமானம் தரையிறங்கியபோது விபத்து; பிரபல இசையமைப்பாளர் - மனைவி, குழந்தை உள்பட 9 பேர் பலி

விமானம் அவரசமாக தரையிறங்கியபோது ஏற்பட்ட விபத்தில் பிரபல இசையமைப்பாளர்,மனைவி, குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
விமானம் தரையிறங்கியபோது விபத்து; பிரபல இசையமைப்பாளர் - மனைவி, குழந்தை உள்பட 9 பேர் பலி
Published on

சண்டோ டொமினிகோ,

லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றான டொமினிகன் குடியரசு நாட்டில் இன்று நடைபெற்ற விமான விபத்தில் பிரபல இசையமைப்பாளர், அவரது மனைவி மற்றும் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.

தனது இசையமைப்பு மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் ஜோஷி ஏஞ்சல் ஹர்னடின்ஸ். ஃபாலோ லா மூவி என தனது ரசிகர்களால் அழைக்கப்படும் ஜோஷி உலகம் முழுவதும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். இவருக்கு டிபி வொன் மெரி ஜிமென்ஸ் ஹர்சியா (31) என்ற மனைவியும் ஜேடன் (4) என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், சண்டோ டொமினிகோவில் உள்ள இசபெல்லா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜோஷி தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பர்கள் என மொத்தம் 9 பேர் தனி சொகுசு விமானம் மூலம் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒர்லெண்டோ நகருக்கு புறப்பட்டன.

புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், விமானத்தை மீண்டும் இசபெல்லா விமான நிலையத்திலேயே அவசரமாக விமானி தரையிறக்கியுள்ளார்.

அவசர தரையிறக்கத்தின் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து ஓடுதளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் இசையமைப்பாளர் ஜோஷி, அவரது மனைவி ஹர்சியா, மகன் ஜேடன் உள்பட விமானத்தில் பயணித்த 9 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஜோஷி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com