ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் பஞ்சாப் பாடகர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட கார் விபத்தில் பஞ்சாப் பாடகர் நிர்வாயிர் சிங் உயிரிழந்து உள்ளார்.
ஆஸ்திரேலியாவில் கார் விபத்தில் பஞ்சாப் பாடகர் உயிரிழப்பு
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வடமேற்கே 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பஞ்சாப்பை சேர்ந்த பாடகர் நிர்வாயிர் சிங் என்பவர் சிக்கி உயிரிழந்து உள்ளார்.

இதுபற்றி இங்கிலாந்து நாட்டை அடிப்படையாக கொண்டு வெளியான அறிக்கையில், நிர்வாயிர் சிங் தவறான இடத்தில், தவறான நேரத்தில் வந்து விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார் என தெரிவித்து உள்ளது.

9 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு சென்று இசை தொழிலை சிங் தொடர்ந்து வந்துள்ளார். அவரது மை டர்ன் என்ற ஆல்பத்தில் இடம் பெற்ற தேரே பீனா என்ற பாடல் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்த பாடல்களில் ஒன்று.

இந்த விபத்தில் சிக்கிய 3-வது காரில் இருந்தவர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் இருந்து வல்லான் பகுதியை சேர்ந்த ஆண் மற்றும் சன்பர்ரி பகுதியை சேர்ந்த பெண் என இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். விபத்துக்கான காரணம் பற்றிய போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com