புதின்-வாக்னர் சர்ச்சை "உண்மையான விரிசலை" அம்பலப்படுத்துகிறது - ஆண்டனி பிளிங்கன்

ரஷிய அதிபர் புதின் மற்றும் வாக்னர் குழு இடையிலான சர்ச்சை உண்மையான விரிசலை அம்பலப்படுத்துவதாக ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.
Image Courtacy: ANI
Image Courtacy: ANI
Published on

வாஷிங்டன்,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியது. போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்துவதாக வாக்னர் ஆயுதக் குழு அறிவித்திருந்தது.

கிளர்ச்சியாளர்களுக்கான பாதுகாப்பிற்கான உத்தரவாதம் பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ அலுவலகம் மூலமாக கொடுக்கப்பட்டதால், ரஷியா முழுவதும் வாக்னர் போராளிகளின் இயக்கத்தை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனவே, போராளிகள் உக்ரைனில் தங்களின் கள முகாம்களுக்கு பின்வாங்க உத்தரவிடப்பட்டதாக வாக்னர் ஆயுதக் குழுவின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷிய அதிபர் புதின் மற்றும் வாக்னர் குழு இடையிலான மோதல் உண்மையான விரிசலை அம்பலப்படுத்துவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து வாக்னர் குழுவின் தலைவர் தனது திட்டத்தை கைவிடுவார் என்று உங்களுக்கு தெரியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "எனக்குத் தெரியாது, மேலும் நாங்கள் முழுமையாக அறிவோம் என்று எனக்குத் தெரியவில்லை. இது வரவிருக்கும் நாட்கள் மற்றும் வாரங்களில் வெளிப்படும் விஷயமாக இருக்கலாம். அதைப் பற்றிய தெளிவான புரிதல் எங்களிடம் இல்லை. இது உண்மையில் ரஷியாவின் உள்விவகாரம்.

ஆனால் நாங்கள் அறிந்தது என்னவென்றால், அவர்களிடையே உண்மையான விரிசல்கள் வெளிப்படுவதை நாங்கள் காண்கிறோம். மீண்டும் புதினின் அதிகாரம் மிக்க நேரடி சவால் பகிரங்கமாக வெளிவருகிறது. இந்த போர், இந்த ஆக்கிரமிப்பு ரஷியாவின் தவறான சாக்குப்போக்குகளின் கீழ் பின்தொடரப்பட்டது" என்று ஆண்டனி பிளிங்கன் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com