#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு உதவ ராணுவ கூட்டணி தயார் - நேட்டோ பொதுச் செயலாளர்

உக்ரைனில் தலையிடும் எந்த நாட்டிற்கும் மின்னல் வேகமான பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் எச்சரித்துள்ளார்.
(Credits: AP)
(Credits: AP)
Published on

கீவ்,

உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-

ஏப்ரல் 28, 11.55 p.m

உக்ரைனுக்கு ஆதரவாக 33 பில்லியன் டாலர்களை கோரும் ஜோ பைடென்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 33 பில்லியன் டாலர்களை உக்ரைனுக்கு உதவுவதற்காக காங்கிரசிடம் கேட்டுக்கொண்டார். இதில் 20 பில்லியன் டாலர் ராணுவ உதவிக்கும், 8.5 பில்லியன் டாலர் அரசாங்கத்திற்கு நேரடிப் பொருளாதார உதவிக்கும், 3 பில்லியன் டாலர் மனிதாபிமான உதவி ஆகியவை அடங்கும் என்று உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 28, 11.26 p.m

உக்ரைனில் உள்ள ஆறு ஆயுதங்கள், எரிபொருள் கிடங்குகளை ஏவுகணைகள் மூலம் அழித்ததாக ரஷியா கூறுகிறது

உக்ரைனில் உள்ள 6 ஆயுதங்கள் மற்றும் எரிபொருள் கிடங்குகள் மீது ராணுவம் ஏவுகணைகளை வீசி அழித்ததாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று தெரிவித்தது.

ஏப்ரல் 28, 10.31 p.m

ரஷியாவின் 8,000 க்கும் மேற்பட்ட போர்க் குற்றச் சம்பவங்களை உக்ரைன் அடையாளம் கண்டுள்ளது

உக்ரேனிய புலனாய்வாளர்கள் ரஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து 8,000 க்கும் மேற்பட்ட போர்க்குற்றங்கள் சந்தேகிக்கப்படுவதை அடையாளம் கண்டுள்ளனர் என்று ஏ.எப்.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 28, 9.00 P.M

உக்ரைனுக்கு உதவ ராணுவ கூட்டணி தயார் - நேட்டோ பொதுச் செயலாளர்

ரஷியாவிற்கு எதிராக, ராணுவ கூட்டணி யுக்ரேனுக்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் தெரிவித்துள்ளார்.

பிரஸ்ஸல்சில் நடைபெற்ற இளைஞர் மாநாட்டில் பேசிய ஸ்டோல்டன்பெர்க், "நீண்ட காலத்திற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், "இந்தப் போர் பல மாதங்கள், ஆண்டுகள் நீடிக்கும். நீடிக்கும் சாத்தியம் உள்ளது," என்றார்.

நேட்டோ நாடுகள் மற்றும் இந்த அணியில் அங்கம் வகிக்காத நாடுகள் ஜெர்மனியில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் சந்தித்தன. அப்போது உக்ரைன்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கு உதவுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

உக்ரைனின் நட்பு நாடுகள் ஆயுதங்களை வழங்க தயாராகி வருவதாக நேட்டோ தலைவர் கூறினார். பிப்ரவரி 24 அன்று ரஷியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து பல நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ, நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.

ஏப்ரல் 28, 8.00 P.M

கைதிகள் பரிமாற்றத்தில் 33 வீரர்கள் மற்றும் 12 பொதுமக்களை உக்ரைன் வரவேற்கிறது

உக்ரைனுடனான போர்க் கைதிகளின் பரிமாற்றத்தில் 13 அதிகாரிகள் உட்பட 33 உக்ரைன் வீரர்களை ரஷியா ஒப்படைத்துள்ளதாக உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தெரிவித்துள்ளார்

ஏப்ரல்28, 12.00 pm

ஏப்ரல் 28, 06.00 a.m

நேட்டோ நாடுகள் உக்ரைனுக்கு ஏவுகணைகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை வழங்கியுள்ளன. ஆனால், மோதல் அதிகரிக்கும் என்ற அச்சத்தில் இதுவரை போர் விமானங்களை அனுப்ப தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏப்ரல் 28, 05.35 a.m

போர் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா, ரஷியா கைதிகளான ரீட் மற்றும் யாரோஷென்கோவை மாற்றிக் கொள்கின்றன

உக்ரைனில் நடக்கும் போருக்கு மத்தியில், பல தசாப்தங்களாக இருந்த மிகவும் பதட்டமான உறவுகளுக்கு மத்தியில் அமெரிக்காவும் ரஷியாவும் கைதிகளை மாற்றிக்கொண்டன, ரஷிய விமானி கான்ஸ்டான்டின் யாரோஷென்கோவிற்கு ஈடாக முன்னாள் அமெரிக்க மரைன் ட்ரெவர் ரீட் விடுவிக்கப்பட்டார்.

இந்த இடமாற்றம் பரந்த இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இல்லை என்றும் உக்ரைன் மீதான அணுகுமுறையில் அமெரிக்க மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பு மற்றும் மாஸ்கோ மீது விதிக்கப்பட்ட மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து ரஷிய-அமெரிக்க உறவுகள் இடையே பனிப்போர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் 28, 05.10 a.m

உக்ரைன் விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட்டால்..? - புதின் கடும் எச்சரிக்கை

உக்ரைனில் தலையிடும் எந்த நாட்டிற்கும் "மின்னல் வேகமான" பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் யாரேனும் "ஏற்றுக்கொள்ள முடியாத அச்சுறுத்தல்களை" உருவாக்கினால், "யாராலும் கணிக்க முடியாத கருவிகளை" ரஷியா பயன்படுத்தும் என்று விளாடிமிர் புதின் தெரிவித்தார்.

ஏப்ரல் 28, 04.25 a.m

மாஸ்கோ & கீவ் உட்பட பிராந்தியத்தில் ஐ.நா பொதுச்செயலாளரின் தற்போதைய விஜயத்தை நாங்கள் வரவேற்கிறோம். மனித உரிமைகளின் உலகளாவிய பிரகடனம் (UDHR) வரைவு உட்பட மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் இந்தியா முன்னணியில் உள்ளது. உரிய செயல்முறைக்கு மதிப்பளித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் இந்தியா தெரிவித்தது.

ஏப்ரல் 28, 03.51 a.m

இரத்தம் சிந்துவதன் மூலமும் அப்பாவிகளின் உயிர்களைப் பலி கொடுத்தும் எந்தத் தீர்வையும் எட்ட முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். இராஜதந்திரம் மற்றும் உரையாடலின் பாதையைத் தொடர வேண்டியதன் அவசியத்தை மோதலின் தொடக்கத்திலிருந்தே நாங்கள் உணர்ந்துள்ளோம்: உக்ரைன் மீதான ஐ.நாவின் கூட்டத்தில் தூதர் ஆர் ரவீந்திரா தெரிவித்தார்.

ஏப்ரல் 28, 02.18 a.m

நட்பு நாடுகள் உக்ரைனுக்கு டாங்கிகள், ஜெட் விமானங்களை அனுப்ப வேண்டும் - இங்கிலாந்து

இங்கிலாந்தின் உயர்மட்ட இராஜதந்திரி, மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு டாங்கிகள், போர் விமானங்கள் மற்றும் பிற கனரக ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்புமாறு அழைப்பு விடுத்தார், போர் அதிகரிக்கும் என்ற அச்சம் தவறானது என்றும் "செயலற்ற தன்மை மிகப்பெரிய ஆத்திரமூட்டலாக இருக்கும்" என்றும் கூறினார்.

ரஷியாவின் படையெடுப்பை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு உதவும் நாடுகளிடையே "இது தைரியத்திற்கான நேரம், எச்சரிக்கை அல்ல" என்று வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் கூறினார்.

கனரக ஆயுதங்கள், டாங்கிகள், விமானங்கள், மேலும் உற்பத்தியை அதிகரித்தல். இதையெல்லாம் நாம் செய்ய வேண்டும் என்று லண்டன் மேயரின் இல்லமான மேன்ஷன் ஹவுஸில் வருடாந்திர வெளியுறவுக் கொள்கை உரையின் போது டிரஸ் இவ்வாறு கூறினார்.

ஏப்ரல் 28, 01.40 a.m

அமெரிக்கா-இந்தியா இடையே வளர்ந்து வரும் மூலோபாய ஒருங்கிணைப்பு உள்ளது. நிச்சயமாக சீனா அதில் ஒரு பெரிய பகுதியாகும்: அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுலா அமைப்பு உக்ரைன் மீதான அதன் ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏஜென்சியில் இருந்து ரஷியாவை இடைநீக்கம் செய்தது, அது அதன் சட்டங்களை மீறியதாக வாதிட்டது.

ஏப்ரல் 28, 01.15 a.m

உக்ரைனுக்கு 'மிகவும் கடினமான வாரங்கள்' உள்ளன என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

ஏப்ரல் 28, 12.35 a.m

புதினுடன் ஐ.நா. பொதுச்செயலாளர் சந்திப்பு: மரியுபோல் ஆலையில் இருப்போரை வெளியேற்ற சம்மதம்

உக்ரைன் போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதினை ஐ.நா. பொதுச்செயலாளர் சந்தித்து பேசினார். இதில் மரியுபோல் ஆலையில் இருப்போரை வெளியேற்றும் மனிதாபிமான நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.

உக்ரைன் மீதான ரஷிய போர் உலகளவில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்த போரால் ரஷியா மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பல்வேறு பொருளாதார தடைகளை போட்டுள்ளன.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், எரிவாயு வாங்கும் நாடுகள் ரஷிய நாணயத்தில் (ரூபிள்) பணம் செலுத்த வேண்டும். மீறினால் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்படும் என ரஷியா ஏற்கனவே எச்சரித்திருந்தது. அதன்படி போலந்துக்கும், பல்கேரியாவுக்கும் எரிவாயு வினியோகம் செய்வதை நிறுத்துவதாக ரஷியா முடிவு எடுத்துள்ளது. இதை அவ்விரு நாடுகளும் ஒப்பந்த மீறல் என சாடி உள்ளன.

அதே நேரத்தில் இது ஒரு வகையான அச்சுறுத்தல் என்று ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் உர்சுலா தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிடாத நிலையில், ரூபிளில்தான் பணம் செலுத்த வேண்டும் என்பது எங்கள் தடைகளை மீறுவதாகும் என கூறி உள்ளார். ரஷியாவின் நடவடிக்கையால் ஐரோப்பிய எரிவாயு விலை 24 சதவீதம் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடேயே உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்ப வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளுக்கு இங்கிலாந்து வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்து மீது ரஷியாவும் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. அந்த நாட்டைச் சேர்ந்த 287 எம்.பி.க்களுக்கு பொருளாதார தடையை விதித்துள்ளது. இதனால் கன்சர்வேடிவ் கட்சியின் 213 எம்.பி.க்களும், தொழிற்கட்சியின் 74 எம்.பி.க்களும் ரஷியாவில் நுழைய முடியாது.

இதற்கு நடுவில், உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.சபை நேரடியாக களத்தில் குதித்துள்ளது. ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ், நேற்று முன்தினம் ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசினார்.

அதையடுத்து ரஷிய அதிபர் புதினையும், ஆண்டனியோ குட்டரெஸ் நேருக்கு நேர் சந்தித்து பேசினார். 2 மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின்போது மரியுபோல் நகரில் உள்ள அஜோவ் உருக்காலையில் இருப்போரை வெளியேற்ற ரஷியா ஒப்புக்கொண்டதாக ஐ.நா. சபை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுபற்றி ஐ.நா. சபையின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறுகையில், ரஷிய அதிபர் புதினும், ஐ.நா. சபை பொதுச்செயலாளரும் சந்தித்து பேசினர். உக்ரைன் மீதான போர் நடவடிக்கை அண்டை நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டின் அப்பட்டமான மீறல் என ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் விமர்சித்தார். போர் நடக்கும் பகுதிகளில் இருந்து குறிப்பாக மரியுபோலில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான மனிதாபிமான உதவிகளை செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது. அவர்கள் கொள்கை அளவில் அதற்கு ஒப்புக்கொண்டனர். அஜோவ் உருக்காலையில் இருப்போரை வெளியேற்ற ஐ.நா.வும், சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் இணைந்து செயல்பட வேண்டும் என முடிவு செய்தனர் என்று தெரிவித்தார்.

மரியுபோல் நகரம் வீழ்ந்து விட்டதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்தபோதும், இந்த உருக்காலை இன்னும் ரஷியாவால் வசப்படுத்தப்படவில்லை. அந்த ஆலைக்குள் 2 ஆயிரம் வீரர்களும், 1000 பொதுமக்களும் உள்ளனர். அந்த ஆலையை ரஷியா தகர்த்தால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது. இப்போது ஐ.நா. சபை தலையீட்டால் அவர்களது தலை தப்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கிழக்கு உக்ரைனில் பல நகரங்களையும், கிராமங்களையும் ரஷியாவின் தரைவழி தாக்குதலில் இழந்து விட்டதாக உக்ரைன் தெரிவித்தது. இருப்பினும் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் பகுதிகளில் ரஷியாவின் 9 தாக்குதல்களை முறியடித்திருப்பதாகவும் கூறியது.

கடந்த 24 மணி நேரத்தில் உக்ரைன், ரஷியா, மால்டோவா ஆகிய 3 நாடுகளிலும் வான்வழி தாக்குதல்கள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com