ரஷியாவில் பரபரப்பு அதிபர் புதினின் காதலிக்கு இரட்டை குழந்தைகள்?

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், கடந்த 2013-ம் ஆண்டு தனது மனைவி லயிட்மிலா ஷ்கெர்பென்னவாவிடம் இருந்து விவாகரத்து பெற்று, 30 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
ரஷியாவில் பரபரப்பு அதிபர் புதினின் காதலிக்கு இரட்டை குழந்தைகள்?
Published on

மாஸ்கோ,

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், கடந்த 2013-ம் ஆண்டு தனது மனைவி லயிட்மிலா ஷ்கெர்பென்னவாவிடம் இருந்து விவாகரத்து பெற்று, 30 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு பிறந்த 2 மகள்களும் தந்தை புதினுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலினா காவேவா (வயது 36) தன்னை விட 30 வயது மூத்த புதினுடன், நீண்டகாலமாக ரகசிய உறவு கொண்டிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. எனினும் புதின் இதனை மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் தலைநகர் மாஸ்கோவில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் ஒரு மாடி முழுவதும் காலி செய்யப்பட்டு அங்கு அலினா காவேவா, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இத்தாலியை சேர்ந்த சிறப்பு மகப்பேறு டாக்டர் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் அலினா காவேவாவுக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும், இதில் அவருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் ரஷிய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. எனினும் இதை ரஷிய அதிபரின் அதிகாரப்பூர்வ அலுவலகமான கிரெம்ளின் மறுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com