நடுவானில் குலுங்கிய கத்தார் ஏர்வேஸ் விமானம்; 12 பேர் காயம்

லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கி, 5 நாட்களுக்கு முன் சென்ற விமானம் ஒன்று இதுபோன்று நடுவானில் திடீரென குலுங்கிய சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.
நடுவானில் குலுங்கிய கத்தார் ஏர்வேஸ் விமானம்; 12 பேர் காயம்
Published on

தோஹா,

கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் கியூ.ஆர்.017 என்ற எண் கொண்ட விமானம் ஒன்று, கத்தார் நாட்டின் தோஹா நகரில் இருந்து இன்று மதியம் 1 மணி அளவில் டப்ளின் நகருக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானம் துருக்கி நாட்டுக்கு மேலே சென்றபோது, நடுவானில் திடீரென குலுங்கியுள்ளது.

இதில், விமானத்தில் பயணித்த 6 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என மொத்தம் 12 பேர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து, டப்ளின் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், டப்ளின் விமான நிலையத்தின் போலீசார், மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உதவிக்கு ஓடி சென்றனர்.

இதனை டப்ளின் விமான நிலையம் வெளியிட்ட அறிக்கை ஒன்று உறுதிப்படுத்தி உள்ளது. 5 நாட்களுக்கு முன் லண்டன் நகரில் இருந்து சிங்கப்பூர் நோக்கி சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இதுபோன்று நடுவானில் திடீரென்று குலுங்கியது.

211 பயணிகளுடன் சென்ற அந்த விமானத்தில் இருந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 73 வயது முதியவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். பின்னர் அவர் மரணம் அடைந்து விட்டார். 20 பேர் காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதுபற்றிய வீடியோ மற்றும் புகைப்படங்களும் வெளிவந்து வைரலாகின.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com