ஈரான் தாக்குதலால் கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்றுமதி பாதிப்பு: இந்தியா, சீனா பாதிக்கப்பட வாய்ப்பு

கத்தாரின் மிகப்பெரிய ராஸ் லப்பான் திரவ எரிவாயு நிறுவனத்தை ஏவுகணை மூலம் ஈரான் தாக்கியது.
ஈரான் தாக்குதலால் கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்றுமதி பாதிப்பு:  இந்தியா, சீனா பாதிக்கப்பட வாய்ப்பு
Published on

வளைகுடா பிராந்தியத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் நடத்தி வரும் போர் 20-வது நாளை தாண்டியுள்ளது. இந்த போரில் தனது உச்சபட்ச தலைவர் மற்றும் மூத்த தலைவர்களை இழந்த ஈரான், இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகள் மீதும் ஆவேச பதிலடியை கொடுத்து வருகிறது.சர்வதேச சமூகத்தை உலுக்கி வரும் இந்த போர் தற்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, இரு தரப்பும் எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனங்களை குறிவைத்து தாக்கத் தொடங்கியுள்ளன. இதை முதலில் தொடங்கியது இஸ்ரேல் ராணுவம். அதாவது, பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலான சவுத் பார்ஸில் நேற்று முன்தினம் இஸ்ரேல் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

Also Read
சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் ஈரான் அணுசக்தி தளங்களை பார்வையிட அனுமதி
ஈரான் தாக்குதலால் கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்றுமதி பாதிப்பு:  இந்தியா, சீனா பாதிக்கப்பட வாய்ப்பு

கத்தாருடன் இணைந்து இந்த எரிவாயு வயலை ஈரான் சொந்தமாக வைத்திருக்கும் நிலையில், ஈரானுக்கு சொந்தமான பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றது. இதனால் அந்த எரிவாயு வயல் தீப்பற்றி எரிந்தது.ஈரானின் மின் தயாரிப்பில் சுமார் 80 சதவீதம் இந்த இயற்கை எரிவாயுவால் நடைபெறுகிறது. மேலும், குழாய் மூலம் நேரடியாக வழங்கப்படும் இந்த கியாஸ் மூலம் மக்கள் தங்கள் வீட்டை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றனர்.அந்த கியாஸ் வயல் தாக்கப்பட்டதன் மூலம் ஈரானின் மின் விநியோகம் பெரும் பாதிப்பை அடையும் என அஞ்சப்படுகிறது.

Also Read
ஹார்மூஸ் ஜலசந்தி விவகாரம்; பாரசீக வளைகுடா பகுதியில் 22 இந்திய கப்பல்கள் தேக்கம்
ஈரான் தாக்குதலால் கத்தார் எரிவாயு ஆலையில் ஏற்றுமதி பாதிப்பு:  இந்தியா, சீனா பாதிக்கப்பட வாய்ப்பு

இந்த தாக்குதல் ஈரானுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. சவுத் பார்ஸ் தாக்குதலை கடுமையாக கண்டித்த அதிபர் மசூத் பெசஷ்கியான், இது கட்டுப்படுத்த முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், அது ஒட்டுமொத்த உலகுக்கும் பாதிப்பாக அமையும் என்றும் தெரிவித்தார்.அதன்படி, இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடுமையான பதிலடியை தொடங்கியது. குறிப்பாக வளைகுடா பிராந்தியத்தின் எண்ணெய் மற்றும் கியாஸ் நிறுவனங்களை குறிவைத்து தாக்கியது.

குறிப்பாக, கத்தாரின் மிகப்பெரிய ராஸ் லப்பான் திரவ எரிவாயு நிறுவனத்தை ஏவுகணை மூலம் ஈரான் தாக்கியது. நேற்று அதிகாலையில் நடந்த அந்த தாக்குதலால் அந்த நிறுவனம் தீப்பற்றி எரிந்தது.இங்கு ஏற்கனவே நடந்த தாக்குதல் காரணமாக உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய தாக்குதலால் அந்த நிறுவனம் கணிசமான சேதத்துக்கு ஆளாகியுள்ளது என்று கத்தார் தெரிவித்துள்ளது. தாக்குதலால் 17 சதவீதம் அளவிற்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வருடத்திற்கு 20 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.இது தொடர்பாக கத்தார் எரிசக்தி துறை மந்திரி சாத் அல் காபி கூறியதாவது: எரிவாயு தளத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சரிசெய்யும் பணிகளால் ஆண்டுக்கு 12.8 மில்லியன் டன் எல்.என்.ஜி. உற்பத்தி பாதிக்கப்படும். இது 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும்” என்றார். இதனால் ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள், குறிப்பாக சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com