ஈரானின் அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் முயற்சி

அமெரிக்கா தங்களுக்கு விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என கத்தார் கோரிக்கை வைத்துள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் முயற்சி
Published on: 

வாஷிங்டன்,

ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த கத்தார் முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலகப் பொருளாதாரத்தைப் பாதித்து, அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வதற்குக் காரணமாக அமைந்த ஈரானு டனான 8 மாதப் போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் தீவிரமாக முயன்று வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அணுசக்தி விவகார மோதலுக்குத் தீர்வு காண கத்தார் நாடு புதிய சமாதானத் திட்டங்களை முன்வைத்துள்ளது.

இந்தத் திட்டங்களை ஈரான் அரசு தற்போது தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. அமெரிக்க இடைக்காலத் தேர்தல் தோல் விக்குப் பிறகு, இந்த விவகாரம் குறித்துப் பேசிய டிரம்ப். "நாங்கள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்" என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

இருப்பினும், அமெரிக்கா தங்களுக்கு விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும், துறைமுகங்களின் முடக் கத்தை ரத்து செய்ய வேண்டும் மற்றும் போர்க்கால இழப்பீடு வழங்க வேண்டும் என்ற பல கடுமையான நிபந்தனை களை ஈரான் முன்வைத்துள்ளது. இந்த நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக் கொண்டால் மட்டுமே அடுத்தகட்ட அணு சக்திப் பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று ஈரான் பிடிவாதமாகத் தெரிவித்துள்ளது.

X