

பஹ்ரைன்,
கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தின. அதற்கு ஈரான் பதிலடி கொடுத்தது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. இதன் காரணமாக உலக அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இந்தநிலையில், அமெரிக்கா தொடுத்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தை இறுதி செய்ய, கத்தார் தூதுக்குழு ஈரான் பயணம் மேற்கொண்டுள்ளது.
ஒப்பந்தம் இன்றே கையெழுத்தாகலாம் என அமெரிக்கா,பாகிஸ்தான் கூறினாலும், தனது நிபந்தனைகளில் ஈரான் உறுதியாக இருப்பதால் முரண்பாடு நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) கையெழுத்தாக உள்ளதாக அமெரிக்க ஜனாதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான உடனே, சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாகத் திறக்கப்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் இது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதை அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மத்தியஸ்தம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தானும் உறுதி செய்துள்ளது. அமைதி ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான சாத்தியம் இருப்பதாக ஈரான் கூறியுள்ளது. இருப்பினும் அது எப்போது என ஈரான் தெரிவிக்கவில்லை.