ஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு 3 பேர் குண்டு பாய்ந்து பலி

குயின்ஸ்லாந்து மாகாணம், போகியில் உளள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது.
ஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு 3 பேர் குண்டு பாய்ந்து பலி
Published on

கான்பெர்ரா, 

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம், போகியில் உளள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் பிணமாயினர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று துப்பாக்கிச்சூட்டில் அடிவயிற்றில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தவரை மீட்டு, அவசர அறுவை சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மக்கே நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள், அவரது உறவினர்கள் என தெரிய வந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர், மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி விட்டார். அவரை தேடும் வேட்டையை போலீஸ் முடுக்கி விட்டுள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.

இந்த துப்பாக்கிச்சூட்டால் ஆஸ்திரேலியா அதிர்ந்து போய் இருக்கிறது. ஏனென்றால் அங்கு உலகிலேயே கடுமையான துப்பாக்கிச்சட்டங்கள் இருந்தும், இப்படியொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஆர்மிட் கருத்து தெரிவிக்கையில் இது மிகவும் அரிதான ஒரு சம்பவம் என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com