ரெயில் நிலையத்துக்கு குருநானக் பெயர் சூட்டப்படும் - பாகிஸ்தான் மந்திரி அறிவிப்பு

ரெயில் நிலையத்துக்கு குருநானக் பெயர் சூட்டப்படும் என பாகிஸ்தான் மந்திரி அறிவித்துள்ளார்.
ரெயில் நிலையத்துக்கு குருநானக் பெயர் சூட்டப்படும் - பாகிஸ்தான் மந்திரி அறிவிப்பு
Published on

லாகூர்,

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் நான்கானா ரெயில் நிலைய பணிகளை பார்வையிட்ட ரெயில்வே மந்திரி ஷேக் ரஷீத் கூறியதாவது:-

பாகிஸ்தானில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும். ஆன்மிக சுற்றுலாவை ஊக்குவிப்பதில் இந்த ரெயில் நிலையம் முக்கிய பங்காற்றும். இந்த ரெயில் நிலையத்துக்கு சீக்கியர்களின் முதன்மை குருவான குருநானக் பெயர் சூட்டப்படும்.

குருநானக் இந்த நகரில் பிறந்து, இங்கு தான் முதலில் தனது உபதேசத்தை தொடங்கினார். உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்களின் பிரபல புனித தலமாக இந்த நகரம் விளங்குகிறது. பாபா குருநானக் ரெயில் என்ற புதிய ரெயில் லாகூர்-நான்கானா இடையே விரைவில் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com