பயங்கரவாதத்தின் முழு அமைப்பையும் தகர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்- ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

பயங்கரவாதம, அப்பாவி உயிர்களைப் பறிப்பதோடு, முதலீட்டையும் வர்த்தகத்தையும் சீர்குலைப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார்.
பயங்கரவாதத்தின் முழு அமைப்பையும் தகர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம்-  ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்
Published on: 

துஷான்பே,

பயங்கரவாதத்தின் முழு அமைப்பையும் தகர்க்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்று இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

தஜிகிஸ்தானின் துஷான்பே நகரில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்கள் மன்றத்தின் 25-வது கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

அமைதிக்கும், வளர்ச்சிக்கும் மிக மோசமான அச்சுறுத்தல்களில் ஒன்றாகப் பயங்கரவாதம் உள்ளது. பயங்கரவாதத்தின் முழுமையான அமைப்பைத் தகர்க்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

வர்த்தகத்தை சீர்குலைக்கும் பயங்கரவாதம்

பயங்கரவாதம் அப்பாவி உயிர்களைப் பறிப்பதோடு, முதலீட்டையும் வர்த்தகத்தையும் சீர்குலைக்கிறது. இளைஞர்களுக்கு உரிமையுடன் கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும் இது பறிக்கிறது. பயங்கரவாதத்தில் எந்த நியாயமும் இல்லை, அதை ஒழிப்பதில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை.

பயங்கரவாதிகளுக்கு நிதியளிப்பவர்கள், ஆதரவளிப்பவர்கள் அல்லது அவர்களுக்குப் புகலிடம் அளிப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதல் 'நாகரிக உரையாடல் மன்றத்தை' (Civilisational Dialogue Forum) இந்தியா நடத்தும். இதில் அனைத்து உறுப்பு நாடுகளும் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com