கிம் ஜாங் அன் - மூன் ஜே இன் சந்திப்பு நடைபெற்ற பகுதிக்குச் சென்ற ராஜ்நாத்சிங்

கடந்த ஆண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் - தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் சந்திப்பு நடைபெற்ற பகுதிக்கு ராஜ்நாத்சிங் சென்றார்.
கிம் ஜாங் அன் - மூன் ஜே இன் சந்திப்பு நடைபெற்ற பகுதிக்குச் சென்ற ராஜ்நாத்சிங்
Published on

புதுடெல்லி,

3 நாட்கள் அரசு முறைப்பயணமாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தென்கொரியா சென்றுள்ளார். தனது சுற்றுப்பயணத்தின் போது தென் கொரிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜோயாங் கியோங் டூ - வை சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இரு தரப்பு பாதுகாப்பு உறவுகள், பாதுகாப்பு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தனது தென்கொரிய சுற்றுப்பயணத்தின் இறுதி நாளான இன்று, கடந்த ஆண்டு (2018) வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் சந்தித்துக்கொண்ட பன் ஜோம் பகுதிக்கு ராஜ்நாத் சிங் சென்றார்.

தென்கொரியா-வடகொரியா போருக்கு பின்னர் அமைதிப் பகுதியாக அறிவிக்கப்பட்ட பன்-முன்-ஜோம் நகரில் கடந்த 2018-ல் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து கொண்டனர். இந்த பகுதி ராணுவமற்ற பகுதி என்று அழைக்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இப்பகுதிக்குத்தான் சென்றார். தென்கொரியா மற்றும் வடகொரியா ஆகிய பகுதிகளை இணைக்கும் பாலத்திற்கும் சென்றார். அப்போது கூறிய ராஜ்நாத்சிங், கொரியன் தீபகற்பத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கு மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இந்தியா எப்போதும் ஆதரவு அளிக்கும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com