

ரான்சம்வேர் எனப்படும் கம்ப்யூட்டர் வைரஸ் கடந்த இரு தினங்களாக உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. கம்யூட்டரில் நுழைந்து நமது தகவல்களை ஹேக் செய்வதுடன், ஹாட் டிஸ்கில் சேமித்து வைத்துள்ள தகவல்களையும் அழித்துவிடுவதாக மிரட்டி 300 டாலர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறப்படுகிறது.
100-க்கும் மேற்பட்ட நாடுகளின் கம்யூட்டர்களை தாக்கியுள்ள ரான்சம்வேர் இதுவரை 45,000-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலேயே அதிக அளவிலான ரான்சம்வேர் வைரஸ் தாக்குதல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, டெல்லி உள்ளிட்ட இடங்களின் ஒருசில பகுதிகளில் ரான்சம்வேர் தாக்குதல்கள் அறியப்பட்டுள்ளது.
இதனிடையே, ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் குற்றம்சாட்டியுள்ளார்.
மைக்ரோசொப்ட் நிறுவனம் அமெரிக்காவை குற்றம்சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்றும், இதற்கு அமெரிக்காவே காரணம் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஜப்பானில் 2,000-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ள நிலையில், சீனாவில் 30,000-க்கும் அதிகமான கம்யூட்டர்களை ரான்சம்வேர் பாதித்துள்ளது.