சீனாவில் வேகமாக பரவும் சிக்குன்குனியா - பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு


சீனாவில் வேகமாக பரவும் சிக்குன்குனியா - பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
x

கோப்புப்படம்

சீனாவிற்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறு அமெரிக்கா தங்கள் நாட்டவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

பெய்ஜிங்,

கொசுக்களால் பரவும் வைரஸ் நோயான சிக்குன்குனியாவின் பாதிப்புக்கு எதிராக சீனாவில் மக்கள் கடுமையாக ப் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதன்படி இந்த ஆண்டு தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேருக்கு சிக்குன்குனியாவின் பாதிப்புகள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

போஷன் நகரம் இந்த தொற்றுநோயின் மையமாக கருதப்படுகிறது. சிக்குன்குனியா ஆசியாவிற்கு புதிதல்ல என்றாலும், சீனாவிற்குள் அதன் பரவல் அரிதானது. தற்போதைய வைரஸ் நோயின் வேகம் கவலையை ஏற்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) வெளியிட்ட தகவல்படி, கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 3,000 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது மாகாண அளவிலான எண்ணிக்கையை ஆபத்தான அளவிற்குக் கொண்டு வந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்டாங்கில் குறைந்தது 12 நகரங்களும் தொற்றுநோய்களை உறுதிப்படுத்தியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நோய் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் வீடுகளுக்கு அருகில் இனப்பெருக்கம் செய்யும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக 10,000 யுவான் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story