

வாஷிங்டன்,
அமெரிக்காவில் இடைத்தேர்தலில் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மை பெற்றது ஜனநாயக கட்சி . எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 218 இடங்களை கைப்பற்றி உள்ளது.
வெர்மான்ட் மாகாணத்தின் கவர்னர் தேர்தலில் கிறிஸ்டின் ஹால்குஸ்ட் ( வயது 29) என்ற திருநங்கை போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்று முதல் திருநங்கை கவர்னராகி உள்ளார்.
கூடுதலாக, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு இரண்டு முஸ்லீம் பெண்கள் உறுப்பினர்கள் கிடைத்து உள்ளனர். சோமாலிய அகதி இலன் ஒமர் மற்றும் பாலஸ்தீனியத்தை சேர்ந்த ரஷிதா தலாப் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.
இருவரும் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள். ஒமர் மினியாபோலிஸ், மினசோட்டாவில் வெற்றி பெற்றார். தலாப், டெட்ராய்ட் மாவட்டம் டியர்பார்னில் தேர்ந்து எடுக்கப்பட்டார்.