‘எதிர்க்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார்’ - டிரம்ப் கருத்து

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு டிரம்ப் அளித்துள்ள பேட்டி உலக அரங்கில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘எதிர்க்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயார்’ - டிரம்ப் கருத்து
Published on: 

வாஷிங்டன்,

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் முடிவுகள், ஆளுங்கட்சியான குடியரசுக் கட்சிக்கு பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கட்டுப்பாட்டையும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிரடியாகக் கைப்பற்றியுள்ளது.

டிரம்ப் செல்வாக்கு சரிவு

இந்த அதிரடித் தோல்வியால் டிரம்பின் அரசியல் செல்வாக்குக்கு பெரும் சரிவை சந்தித்துள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு டிரம்ப் அளித்துள்ள பேட்டி உலக அரங்கில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோல்விக்கு காரணம்

அதில், "எனது கடுமையான குடியேற்றக் கொள்கை மற்றும் நாடு கடத்தல் நடவடிக்கைகள் மிகக் கொடூரமாக இருந்திருக்கலாம், அதுவே இந்தத் தோல்விக்கு முக்கியக் காரணம்" என்று அவர் பகிரங்கமாகத் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், இந்தியத் தொழில்நுட்ப ஊழியர்கள் உள்ளிட்ட பலரை பாதித்த இந்தக் கடுமையான போக்கை மாற்றி, இனிவரும் காலங்களில் எதிர்க்கட்சியுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

X