ஆப்பிரிக்க நாட்டில் மேலும் ஒரு நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நீண்ட காலமாக கிளர்ச்சியாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்பிரிக்க நாட்டில் மேலும் ஒரு நகரத்தை கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்
Published on

கின்ஷாசா,

மேற்கு ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் நீண்ட காலமாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக ருவாண்டா சுமார் 4 ஆயிரம் வீரர்களை அனுப்பி உதவி புரிந்து வருகிறது. எனவே ருவாண்டா உதவியுடன் அங்குள்ள கோமா நகரத்தை கிளர்ச்சியாளர்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த உள்நாட்டுப்போரில் இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கடந்த 3-ந் தேதி மனிதாபிமான அடிப்படையில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தத்தை அறிவித்தனர். ஆனால் அதற்குள் கிழக்கு காங்கோ ஜனநாயக குடியரசின் புகாவுக்கு அருகே மற்றொரு நகரத்தையும் கைப்பற்றி இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் உள்நாட்டு போர் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com