இந்திய பெண்ணுக்கு ஐ.நா.வில் அங்கீகாரம் - மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமனம்

ஆசியாவில் இருந்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட முதல் நபர் என்ற பெருமையை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார்.
இந்திய பெண்ணுக்கு ஐ.நா.வில் அங்கீகாரம் - மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமனம்
Published on

நியூயார்க்,

இனவெறி, சகிப்புத்தன்மை குறித்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக இந்தியாவைச் சேர்ந்த அஸ்வினி கே.பி. நியமிக்கப்பட்டுள்ளார். பேராசிரியரும், தலித் செயல்பாட்டாளருமான அஸ்வினி கே.பி. பெங்களூருவில் உள்ள கல்லூரி ஒன்றில் அரசியல் அறிவியல் பிரிவில் உதவி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு அறிக்கையாளராக நியமிக்கப்பட்ட 6-வது நபர் மற்றும் ஆசியாவைச் சேர்ந்த முதல் நபர் ஆகிய பெருமைகளை அஸ்வினி கே.பி. பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்த பதவியில் நியமிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com