கைலாசா நாட்டுக்கு அங்கீகாரமா? ஐ.நா.சபை விளக்கம்

ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர் என்று ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கைலாசா நாட்டுக்கு அங்கீகாரமா? ஐ.நா.சபை விளக்கம்
Published on

சர்ச்சை சாமியார் நித்யானந்தா கைலாசா என்ற பெயரில் நாட்டை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே கைலாசா நாட்டுக்கு அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் அளித்ததாக அதன் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்களில் புகைப்படம் வெளியிட்டு உள்ளனர்.

அதில் ஜெனீவாவில் கடந்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டில் கைலாசா சார்பில் பெண் சாமியார் விஜயபிரியா தலைமையிலான தூதுக்குழு பங்கேற்ற புகைப்படங்கள் இருந்தன. அவர் சில கருத்துகளையும் பதிவு செய்திருந்தார்.

இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்து உள்ளார்.

அதில் அவர், 'கடந்த பிப்ரவரி 24-ந்தேதி நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில் தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டது. அதில்தான் நித்யானந்தா தரப்பினர் பங்கேற்று உள்ளனர். அவர்கள் கூறியதை நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com