உகாண்டாவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு

உகாண்டாவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு
Published on

கம்பலா,

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு பல இடங்களில் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கசேஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.

காங்கோ நாட்டின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கேசஸ் மாவட்டம் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இப்பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படுவது மிகவும் வாடிக்கையாக ஒன்றே என்று கூறப்படுகிறது. தற்போது நிலச்சரிவில் சிக்கி 15 பேர் உயிரிழந்து இருக்கும் தகவலை செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் உகாண்டா நாட்டின் போலீஸ் தரப்பில் இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com